பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேர் பிடிபட்டனர்: காவலன் செயலி மூலம் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை சி.பி.சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அனிதா சுரானா (47). நேற்று காலை இவரது வீட்டுக்கு வந்த 2 பேர், சுரானாவிடம் தவறாக பேசி, தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர். உடனே அவர், அந்த 2 பேரை சமாளித்தபடி, தனது செல்போனில் உள்ள ‘காவலன்’ செயலி மூலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த 2 பேரையும் பிடித்தனர். அதற்குள் அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த 2 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

போலீசார், அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், பழைய வண்ணாரப்பேட்டை வேலயுத பாண்டியன் தெருவை சேர்ந்த துணிக்கடை ஊழியர் சலிம் (41), இவரது உறவினர் பர்மாவை சேர்ந்த தாவுத்  (38) என்பதும் தெரியவந்தது. திருமணமான இவர்கள், வெளியில் உல்லாசம் அனுபவிக்க வேண்டும், என நண்பரிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அந்த நண்பர், தவறுதலாக அனிதா சுரானாவின் முகவரியை கொடுத்து, இங்கு செல்லுங்கள், என அனுப்பி உள்ளார். அதன்படி, இவர்கள் இருவரும் அனிதா சுரானா வீட்டிற்கு வந்து, தகாத முறையில் நடக்க முயன்றது தெரிந்தது.

Related Stories:

>