×

தமிழகத்தில் முதன்முறையாக வனத்துறை அலுவலகத்தில் திருநங்கைக்கு பணி

ஊட்டி: தமிழகத்திலேயே முதன் முறையாக ஊட்டி வனத்துறை அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது மகன் சுதன் ராஜ். இவர் திருநங்கையாக மாறிய பின், தனது பெயரை தீப்தி என மாற்றிக் கொண்டார்.
திருநங்கையாக மாறிய இவர், கோவையில் உள்ள ரஷ்யா, அம்மு என்ற திருநங்கைகளிடம் அடைக்கலம் புகுந்தார்.

தீப்தியை மகளாக ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளார். அம்மு பேத்தியாக தீப்தியை ஏற்றுக் கொண்டுள்ளார். பிறகு, தீப்தியை மூன்று ஆண்டுகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், தீப்தியின் தாய் மாலதியும், அவரை ஏற்றுக்கொண்ட நிலையில், தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு அவரது தாயார் தடையில்லா சான்று அளித்துள்ளார். தற்போது, தீப்திக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டள்ளது. நேற்று இவர் முறைப்படி இந்த பணியில் சேர்ந்துள்ளார். மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த தீப்தி, தமிழகத்தில் வனத்துறை அலுவலகத்தில் பணியில் சேரும் முதல் திருநங்கை தீப்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Forest Office , In Tamil Nadu, for the first time, the forest office, transgender, work
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...