×

நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது; உச்சநீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுக. அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் கமிஷன் மாறியுள்ளது. ஜனநாயகத்திற்கு வெட்ககேடாக உள்ளது.

புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்படவில்லை. நேர்மையான உண்மையான தேர்தல் என்ற விஷயத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறுவழியில்லை இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை செய்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : election date announcement ,court ,MK Stalin , Court, Local Election, MK Stalin, condemnation
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...