ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் அதிவேகமாக ‘பறந்தவருக்கு’வீடு தேடி சென்றது அபராதம்

*மதுரை போலீசார் அதிரடி

மதுரை : மதுரையில் டூவீலரில் சென்ற வாலிபர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அபராத தொகை வீடு தேடிச் சென்றது.மதுரையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய போலீசாருக்கு உடலில் பொருத்திக் கொள்வதற்கான 40 கேமராக்களை, கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார். நேற்று காலை பழங்காநத்தம் அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக டூவீலரில் ஒரு வாலிபர், ெஹல்மெட் அணியாமல் அவ்வழியாக அதிவேகமாக சென்றார். போலீசார் தடுத்து நிறுத்துவதற்குள், அவர் கடந்து சென்றார்.

 இதனால் அவரை போலீசார் நிறுத்த முடியவில்லை. ஆனால் இன்ஸ்பெக்டர் அணிந்திருந்த கேமரா அவரது டூவீலரை படம் எடுத்தது. அதன் மூலம் அவர் ஓட்டிச் சென்ற டூவீலரின் எண்ணை கொண்டு அவரது முகவரி மற்றும் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவருக்கு ரூ.200க்கான அபராத தொகை அறிவிப்பு எஸ்எம்எஸ்சில் அனுப்பப்பட்டது.

இதனையறிந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அய்யனார் என்ற அந்த வாலிபர்,  நேரில் வந்து தனக்கு வந்த எஸ்எம்எஸ்சை உறுதி செய்து விட்டு,  ஆன்லைனில் ரூ.200ஐ அபராதமாக செலுத்தி விட்டுச் சென்றார். போலீசார் கூறும்போது, ‘‘ஹெல்மெட் அணிந்தும், உரிய ஆவணங்களுடனும் டூவீலர்களில் பயணிக்க வேண்டும். விதிமீறல்களை கைவிட்டு, முறையாக வாகனங்களை இயக்குவதுடன், போலீசாரின் சோதனைகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும். சிக்னல் விளக்குகளுக்கேற்ப வாகனங்களை இயக்குவதும் அவசியம். வாகன ஓட்டிகள் விதிமீறி, அபராத நடவடிக்கைளுக்கு ஆளாகாமல் காத்துக் கொள்வது அவசியம்’’ என்றனர்.

Related Stories:

>