அம்பேத்கரின் நினைவு தினம் மோடி, தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி:  மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சட்ட மேதை அம்பேத்கரின் 63வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பாபா சாகேப்புக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

அரசியலமைப்பு என்ற வடிவில் சிறப்பான பரிசை நாட்டுக்காக வழங்கியுள்ளார். ஜனநாயகத்தின் அடித்தளமே அது தான். இந்த நாடு எப்போதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கும்,’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதனுடன் அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பை விவரிக்கும் ஒரு வீடியோவையும்  அவர் இணைத்துள்ளார். அதில், ’நேர நிர்வாகம், உற்பத்தி திறனுக்கான சிறந்த உதாரணம் அம்பேத்கர். இது, நமது பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதற்கு ஊக்கம் அளிக்கிறது.   இந்தியாவின் மூலமந்திரமாக அம்பேத்கரை குறிப்பிடலாம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>