×

உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை: திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் பேட்டி

புதுடெல்லி: உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடனே நடத்த வாய்ப்பு இல்லை என்று திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே சமயம், விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இவ்வாறு துண்டு துண்டாக நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதித்துள்ள, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துகொள்ளலாம் என்றும், இந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதே நேரத்தில், எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களில் இடஒதுக்கீட்டை முடித்த பின்தாக் தேர்தல் நடத்த முடியும். இல்லாவிட்டால் முழுமையாக இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது. 4 மாதங்களில் வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை செய்யாமல் தேர்தல் நடத்தினார் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். எனவே, இப்போதைக்கு தேர்தலை நடத்துவது என்பது சந்தேகமே. இதற்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை, என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இடஒதுக்கீடு பற்றி சொல்லப்படவில்லை, எனவும் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Wilson ,Interviews ,Delhi ,DMK , Local Elections, DMK, Lawyer Wilson, Supreme Court
× RELATED சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா...