×

ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம்

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் விடிய விடிய கொட்டிய மழையால் தங்கச்சிமடம் ராஜா நகரில் இருந்த அரசமரம் வேரோடு சாய்ந்து குடியிருப்பு குடிசை வீடுகளின் மீது விழுந்தது. இதனால் 6 வீடுகள் சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில்  மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழையால் தங்கச்சிமடம் ராஜாநகர் பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் அரசமரம் ஒன்று வேறோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில் அப்பகுதியில் இருந்த 6 குடிசை வீடுகள் சேதம் அடைந்தன. எனினும் இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.மேலும், மின்கம்பங்களும் சேதமடைந்து விழுந்ததால் இரவு முழுவதும் தங்கச்சிமடம் பகுதியில் மின்சாரம் துணடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தாசில்தார் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற ஊழியர்கள் சாய்ந்து விழுந்தமரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார வாரிய ஊழியர்களும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Rameswaram ,Rajaram ,Accident ,cottage houses ,Rajamam , Rameswaram, Cells, Rajaram, Root, Cottage, Damage
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...