×

விமான நிலைய சுங்க சோதனையில் டிமிக்கி கடத்தல் தங்கத்துடன் மெட்ரோ ரயிலில் ஏற முயன்ற இலங்கை ஆசாமி சிக்கினார்

* ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர்
* ரூ.12.5 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:  கொழும்பு நகரை சேர்ந்தவர் முகமது சபீர் (33). இவர், நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்கு கொழும்புவில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுற்றுலா பயணியாக சென்னை வந்தார். அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவர், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வரை நடந்தே சென்றார். மீனம்பாக்கத்தில் இருந்து சென்னை பாரிமுனை செல்ல டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயில் நிலைய வாயிலில் நுழைய முயன்றார். அங்கு பயணிகளின் உடமைகளை ஸ்கேன் செய்து அனுப்புவது வழக்கம்.  அதுபோல்  இவரது உடமைகளையும் ஸ்கேன் செய்தனர். முகமது சபீரின் கைப்பையில் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனே அந்த பையை எடுத்து தனியாக வைத்துவிட்டு, முகமது சபீரை அழைத்தபோது, அவர் தப்பி ஓட முயன்றார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் விரட்டிப் பிடித்தனர். பின்னர் விமான நிலைய போலீசாரை வரவழைத்தனர். போலீசார் முகமது சபீரையும், அந்த பையையும் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றனர்.   

அப்போது அங்கு நடந்த சோதனையில், கைப்பையில் 3 தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் மொத்த எடை 350 கிராம், மதிப்பு ரூ.12.5 லட்சம். விசாரணையில், சுங்க சோதனையில் நைசாக எடுத்து வந்ததாகவும், முதன் முறையாக மெட்ரோ ரயிலில் ஏறினேன். இங்கு இதுபோன்ற ஸ்கேன் சோதனை நடப்பது தனக்கு தெரியாது என்றும் முகமது சபீர் தெரிவித்தார். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்தனர். உடனே சபீரை கைது செய்து தங்கத்தை கைப்பற்றினர். சுங்க சோதனையில் இருந்து எப்படி பையை கொண்டு வந்தார், அவருக்கு யாராவது உதவி செய்தார்களா என விசாரிக்கின்றனர்.

Tags : Sri Lankan ,Assamese ,train ,Metro ,Asami , Dimicky, airport customs,gold,caught ,trying,climb
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...