போதை பொருள் ஒழிப்பு ஆடியோ விவகாரம் கோபத்தின் உச்சத்தில் பஞ்சாப் அமைச்சர்கள்: விளக்கம் கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருள் கடத்தலை அடுத்த 2 வாரத்தில் ஒழிப்பதாக கூறி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைத்து 2 ஆண்டு ஆகியும் போதை பொருள் ஒழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக  அமைச்சர்கள் இருவர் போதை பொருள் ஒழிப்பு குறித்து வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலை தளங்களில் ஆடியோ உடன் வெளியாகி இருப்பது அமைச்சர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கி உள்ளது. அந்த வீடியோவில் அமைச்சர்கள் இருவரும், போதை பொருளை `மருந்து’ என்ற பெயரில் குறிப்பிட்டு பேசியுள்ளனர்.இதையடுத்து, வீடியோவை வெளியிட்டது யார் என்பது குறித்து மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அமைச்சர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


Tags : Punjab Ministers ,Peak of Punjab Ministers , Drug Abuse ,Audio Issue,Notice , Officers ,Clarification
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...