நன்னடத்தை கைதிகள் தயாரித்த ‘பிரட்’ மருத்துவமனைக்கு சப்ளை: வேலூர் சிறைத்துறை தகவல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள பேக்கரியில் நன்னடத்தை கைதிகள் தயாரித்த பிரட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க், ஷூ தயாரிப்பு, விவசாயம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் தலா
ரூ.30 லட்சம் மதிப்பில் பேக்கரி அமைக்க ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்து வந்தது.

வேலூர் மத்திய சிறை பேக்கரி அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பேக்கரியில் கைதிகள் தயாரிக்கும் பிரட் சிறைக்கு வெளியே உள்ள உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க்கில் உள்ள சிறை பஜாரில் கிடைக்கிறது. மேலும் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சிறைத்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

Tags : Brett' Hospital ,Probation Prisoners: Vellore Prison Information Probation Prisoners ,Fred , Probation Prison, Brett, Hospital, Vellore Prison
× RELATED காளையார்கோவிலில் சொட்டு மருந்து வழங்கல்