×

முன்னாள் பிரதமர் குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால் சீக்கியர்கள் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்: மன்மோகன் சிங்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியதாவது; கடந்த 1984 ல் சீக்கியர் கலவரம் நடந்த போது, மாலை நேரத்தில், உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவை, குஜ்ரால் சந்தித்தார். அப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

விரைவாக ராணுவத்தை அழைக்க வேண்டியது கட்டாயம் என குஜ்ரால் அறிவுரை கூறினார். அந்த அறிவுரை ஏற்கப்பட்டிருந்தால் 1984-ல் நடந்த படுகொலை சம்பவங்கள் தவிர்த்திருக்க முடியும் என பேசினார். குஜ்ரால் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவசரநிலையை தவறாக கையாண்டது குறித்து சில பிரச்னைகள் அவருக்கு இருந்தன. அப்போது நிதி அமைச்சகத்தில், பொருளாதார ஆலோசகர் பதவியில் நான் இருந்தேன். அது முதல் எங்களுக்கு இடையிலான நட்பு வலுப்பெற துவங்கியது என்றார்.

கடந்த 1975 ம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக குஜ்ரால் பதவி வகித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மீடியாக்களை சென்சார் செய்ய குஜ்ரால் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார். 1976 முதல் 1980 வரை அந்த பதவியில் குஜ்ரால் இருந்தார். குஜ்ரால் பிரதமராக இருந்த போது அவர், அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்தார். 2012 ம் ஆண்டு 92 வயதில் குஜ்ரால் காலமானார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Sikhs ,Gujral ,Manmohan Singh , Former Prime Minister, Gujral, Sikh massacre, Manmohan Singh
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி