×

காளையார்கோவில், இளையான்குடியில் தொடர்மழை 100 ஏக்கர் மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கியது

*நீரை இரைத்து வெளியேற்றும் விவசாயிகள்

காளையார்கோவில் :  காளையார்கோவில், இளையான்குடியில் தொடர்மழை பெய்து வருவதால் 100 ஏக்கரில் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  அருகே மாரந்தை, காஞ்சிரம், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மிளகாய்  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. எனவே, நூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இருந்த மிளகாய் செடிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி  அழுகி வருகின்றன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள தண்ணீரை இரைத்து  வெளியேற்றி வருகின்றனர்.

மாரந்தையை சேர்ந்த விவசாயி திருவாசகம்  கூறுகையில், ‘‘ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவழித்து  மிளகாய் சாகுபடி செய்தோம். தற்போது செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி  வருகின்றன. குடிமராமத்து பணிகளில் கண்மாய்களை முறையாக தூர்வாராததால்  தண்ணீர் கண்மாய்க்கு செல்லாமல் வயலுக்குள் பாய்ந்துள்ளது.  வாய்க்கால்களையும் தூர்வாராததால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால்  தண்ணீரை ஒவ்வொரு வயலாக மாறி, மாறி இறைத்து வெளியேற்றி வருகிறோம்.

தொடர்ந்து  மழை பெய்தால் மிளகாய் செடிகள் முழுமையாக அழுகிவிடும். அதிகாரிகள்  கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். இதேபோல் இளையான்குடி வட்டாரத்தில் 4 ஆயிரத்து 66 ஹெக்டேர் பரப்பில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் செடிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. இதுவரை 80 சதவீதம் மிளகாய் செடிகள் அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்|ளனர்.

Tags : hill ,Chilli ,Ilayankudi Area , Ilayankudi ,Chilli crop,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை