×

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் வேண்டுமானால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாம்: அரசு வக்கீல்

டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் வேண்டுமானால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாம் என உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி உச்ச நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரி இடைக்கால மனு தாக்கல் செய்தார். இது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் 8 வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது;

திமுக தரப்பு வழக்கறிஞர்;
*உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
* மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார் என  திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராயிருந்த வழக்கறிஞர்;
* 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
* புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை.
* வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது.
* அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என வாதம் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி;  
* புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடிக்காவிடில் குழப்பம் ஏற்படாதா?
* மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் மறுவரையறை செய்ய வேண்டாமா?
* பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய நிலையே தொடரும் என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது?
* இத்தனை ஆண்டுகளாக ஏன் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை?
* உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நாம் நடக்க வேண்டும் *மாவட்டங்கள் பிரிக்கும் போது வார்டு மறுவரையறை அவசியம்
* உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதாக இருந்தால் கூட பரவாயில்லை; ஆனால் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்
* மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் தேர்தல் நடைமுறையை அரசு தாமதப்படுத்துவதாக தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழக அரசு;
* புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம்.
* வேலூர், காஞ்சி, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம்.
* தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தரப்பு;
* தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும்
* 9மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தால் குழப்பம் ஏற்படும் என திமுக வழக்கறிஞர் வாதம் செய்தார்.

தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு;
* 9 மாவட்டங்களில் மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : elections ,districts ,government ,State prosecutor , Local government , postponed,5 newly created districts, State prosecutor
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...