×

நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் ஹாங்காங் கப்பல் கடத்தல்: மீட்க இந்திய தூதரகம் முயற்சி

புதுடெல்லி: நைஜீரியா அருகே, ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் நேற்று முன்தினம் கடத்திச் சென்றனர். இதில் 18 இந்தியர்கள் உட்பட 19 பேர் உள்ளனர். இவர்களை மீட்பதற்கான முயற்சியில், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ‘விஎல்சிசி நேவி கான்ஸ்டெல்லேஷன்’ என்ற கப்பல் நைஜீரியா வழியாக நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 19 பேர் இருந்தனர். இவர்களில் 18 பேர் இந்தியர்.

இந்த கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி கடத்திச் சென்றதாக, கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் ஏஆர்எக்ஸ் என்ற கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையடுத்து கடத்தப்பட்ட இந்தியர்களின் விபரத்தையும், அவர்களை மீட்பதற்காக ஆப்பிரிக்க நாட்டின் அதிகாரிகளின் உதவியை இந்திய அதிகாரிகள் நாடியுள்ளனர்.


Tags : Hong Kong ,Indians ,Indian ,Nigeria , Nigeria, 18 Indians, Hong Kong ,shipping
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...