×

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிக்கு இன்று தேர்தல் : எடியூரப்பா அரசு நிலைக்குமா?

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜ அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.  கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, இக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு தாவினர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், இத்தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதனால், காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளைத் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஆளும் பாஜ.வுக்கும், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத.வுக்கும் பெரும் சவாலாக உள்ளன. இத்தேர்தலில் குறைந்தப்பட்சம் 7 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜ ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் நீடிக்கும். இல்லை என்றால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். இதனால், வெற்றியை கைப்பற்ற இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்படுகிறது. அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி விவரம் தெரியும்.

காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ஐடி சோதனை

கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் சபாநாயகருமான கே.பி.கோலிவாட் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட அக்கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Tags : Elections ,Karnataka ,government ,Yeddyurappa , Elections ,15 vacant Karnataka polls, Yeddyurappa government to stand?
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்