×

மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு

சென்னை: பணிக்கு தாமதமாக வருவதை தடுக்கும் வகையில் மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவை விரைவில் அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அனைத்து பகிர்மான அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எங்கெங்கு கருவி பொருத்த வேண்டும், பணியாளர்களின் எண்ணிக்கை, பதவி, மொபைல் எண், மெயில் ஐடி உள்ளிட்ட விபரங்களை 10ம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை பொறியாளர்களுக்கு மின்வாரிய தலைமை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தடுக்க இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Biometric Record , Electricity
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...