ஜெயலலிதா மறைந்து இன்று 3 ஆண்டு நிறைவு : முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனாலும், அவரது மரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது.அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள், தொண்டர்கள்,  ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்அஞ்சலி செலுத்துகிறார்கள்.

Tags : Anjali Jayalalithaa ,disappearance ,Deputy Chief Minister ,Chief Minister , 3 years since Jayalalithaa's disappearance,Chief Minister, Deputy Chief Minister
× RELATED பெரியார் மறைந்து பல ஆண்டுகள்...