மதுரை பொறியாளருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: சந்திரயான்-2 விண்கலத்தோடு விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்து, நாசாவின் பாராட்டை பெற்றவர் மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன். இவர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். அவரை முதல்வர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மை செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,Madurai ,Engineer Chief Minister ,Engineer , Chief Minister congratulates, Madurai Engineer
× RELATED தமிழக முதல்வர் கோவை வருகை