×

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை வெங்காயம் வாங்க மக்கள் மோதல்

சித்தூர்: உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் வெங்காயம் விற்பனை செய்தனர். விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சாம்பார் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள், வெங்காயம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொதுமக்களின் நலன் கருதி ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் அருகே உள்ள உழவர் சந்தையில் மானிய விலையில் வழங்கப்பட்ட வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்தனர். கூட்டம் அலைமோதியதால் வெங்காயம் வாங்குவதில் மக்களிடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `சங்கராந்தி (தை பொங்கல்) வரை வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்காது. இருப்பினும் பொதுமக்களின் வசதிக்காக மாநில அரசு சார்பில் மானிய விலையில் வெங்காயம் வழங்கப்படுவது தொடரும். எனவே, பொதுமக்கள் உழவர் சந்தைகளில் வந்து வெங்காயத்தை வாங்கிச்செல்லலாம்’’ என்றனர்.

Tags : Police security, sales, onion
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்