×

நாளை முதல் 15ம்தேதி வரை நெல்லை ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நெல்லை: மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (5ம்தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் நாளை 5ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை வியாழக்கிழமை தவிர மற்ற தினங்களில் திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 56769/ 56770 பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் டிசம்பர் 8, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் மதுரை - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும், டிசம்பர் 5, 6, 7,10, 12, 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 56734/56735 செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை வியாழக்கிழமை தவிர மற்ற தினங்களில் விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

வண்டி எண் 16191/16192 தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாளை 5ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை வரை திண்டுக்கல் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் டிசம்பர் 8 மற்றும் 15ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும், டிசம்பர் 9ம் தேதி நாகர்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல இயங்கும்.வண்டி எண் 22627 திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் நாளை 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை 9ம் தேதி தவிர திருச்சியிலிருந்து காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 9.40 மணிக்கு 150 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். வண்டி எண் 16127 சென்னை - குருவாயூர் விரைவு ரயில் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை வியாழன் தவிர, மற்ற தினங்களில் மதுரை கோட்ட எல்கைக்குள் 125 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். வண்டி எண் 16129 சென்னை- தூத்துக்குடி இணைப்பு ரயில் நாளை 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை வியாழன் தவிர, தூத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும். இத்தகவலை தெற்கு ரயில்வே மதுரைக்கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags : Railways , Rice, rail transport, change
× RELATED தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததே...