×

நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது எனது கடமை என்பது எனக்கு தெரியும்: பொன்.மாணிக்கவேல் பதில் கடிதம்

சென்னை: ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்தவுடன் விரைவில் அவற்றை ஒப்படைக்கிறேன் என பொன்.மாணிக்கவேல் கடிதம் அளித்துள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ம் தேதியோடு நிறைவடைந்தது.

அதனடிப்படையில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்கும் படி அரசாணை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவிக்க முடியாது என்று பொன்மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் மீது அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவதூறு வழக்குக்கு தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை இன்று மாலைக்குள் ஒப்படைக்காவிட்டால் பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என டெல்லியில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார்.

ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம்:

மறுபுறம், சிலைகடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், சிலைகடத்தல் வழக்கு ஆவணங்களை சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பொன்.மாணிக்கவேல் பதில் கடிதம்:

ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்தவுடன் விரைவில் அவற்றை ஒப்படைப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது எனது கடமை என்பது எனக்கு தெரியும் என்று பொன்.மாணிக்கவேல் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gold.Manichael, Court Order, Letter, Documents, Delivery
× RELATED முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்...