×

டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை மனு

புதுடெல்லி: டெல்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலிடம் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கோரிக்கை மனு அளித்தார். அதில், சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்களை திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எஸ்பிஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் சில நிறைவேற்றப்பட்டன. இந்தநிலையில், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது  உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த வசதி பல ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விதிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரயில் மூலமாக கொண்டு செல்லலாம் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த புதிய ரயில் பாதை திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக டி. ஆர். பாலு குற்றம் சாட்டினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிக முக்கியமான பகுதி என்றும் அங்கு ஏராளமான மதக் கோயில்கள் இருக்கின்றன என்றும், ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் என்றும் டி. ஆர். பாலு குறிப்பிட்டார். அங்கு ஏராளமான  பாதுகாப்பு தொழிற் சாலைகள் மற்றும் ராஜீவ் காந்தி நினைவகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், கோயில்கள் பற்றிய உறுப்பினரின் பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலு இது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலை நேரில் சந்தித்த திமுக எம்.பி தயாநிதி மாறன், சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்களை திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அதில், திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Pushy Koel ,DMK ,Dayanidhi Maran ,Delhi , Union Railway Minister, Fuse Goyal, Delhi, DMK MP, Dayanidhi Maran
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...