×

குமிழியம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு உள்வாங்கியது

அரியலூர்: குமிழியம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு உள்வாங்கியது. செந்துறை அருகில் உள்ள குமிழியம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் பொது மக்கள் பயன்படுத்திவந்த அரசாங்க கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குமிழியம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகில் அரசுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு காமராசர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.

கடும் வறட்சியிலும், கோடை காலங்களிலும் வற்றாத இந்த கிணறு குமிழியம் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த வடகிழக்கு பருவமழையால் கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பியது. மேலும் கிணற்றை சுற்றி கட்டப்பட்ட சுவர்கள் நீண்ட காலமானதால் பலமிழந்து இருந்தாலும், கிணறு நிரம்பியதால் அதன் சுவர்கள் கரைந்து கற்கள் கிணற்றுக்குள் சென்றதால் நேற்று மாலை கிணறு படிப்படியாக உள்வாங்கியது. இதை பார்த்த பொதுமக்கள், பல ஆண்டுகளாக குடிநீர் அளித்த கிணறு தூர்ந்து போவதை நினைத்து வேதனையடைந்தனர்.

Tags : village ,civilians ,Kumziyam , Well
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...