×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: 106 நாட்களுக்கு பின் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்


டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ.யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கியுள்ளது. இதே வழக்கில் அமலாக்கத் துறை  அவரை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு  தாக்கல் செய்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த மாதம் 26ம் தேதி தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை இன்று காலை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலருக்கு, சில தினங்களுக்கு முன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கடவுள்தான் காப்பாற்றணும்’: ‘இந்திய பொருளாதாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,’ என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வரிச் சட்ட திருத்த மசோதா குறித்து நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இம்மனு மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக, சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். அவர் மொத்தம் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் திகார் சிறை நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன், இன்று மாலைக்குள் ப.சிதம்பரம் விடுவிக்கப்படுவார்.

ஜாமீனையொட்டி ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது;
* ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குறித்து ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது
* ப.சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
* அனுமதியின்றி ப.சிதம்பரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது
* ப.சிதம்பரம் சாட்சியங்களை நிர்பந்திக்க கூடாது, சாட்சிகளை பாதிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது
* வழக்கின் விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறியுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி காங். கருத்து;
இறுதியில் வாய்மை வென்றது என்று ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி காங். கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் அனைத்து அமச்சங்களையும் ஆராய்ந்து ஜாமீன் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். நீதிமன்றம் ப.சி.க்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Chidambaram ,Supreme Court , INX Media Abuse, P Chidambaram, Bail, Supreme Court
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...