சுவர் இடிந்து 17 பேர் பலி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது விபத்து என்றாலும் இதில் ஏதேனும் தவறு நடத்திருக்குமாயின் அரசும், காவல்துறையும் அதை ேநர்மையுடன் அணுகி  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. வரும் மழைக்காலத்தில் மக்கள் கவனத்துடனும், அரசு விழிப்புணர்வுடனும் இருந்து பெரும் சேதங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan ,families ,victims ,collapse , wall, collapses, Affected, Families, Kamal Haasan
× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது எந்த ஒரு வருத்தமும் இல்லை: கமல்ஹாசன்