×

போலி இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை

சென்னை: போலி இணையதளத்தை கண்டு வாடிக்கையாளர்கள் ஏமாற வேண்டாம் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நேற்று வெளியிட்ட அறிக்கை: பைபர் சேவையை பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து செய்து தருவதாக கூறி போலி இணையதளம் உருவாக்கி மோசடி நடந்து வருவதாக எங்களுக்கு தொடர் புகார்கள் வந்தவாறு உள்ளது. குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்களிடம் பைபர் சேவைக்கு ஆன்லைன் மூலமாக முன்பணம் கட்ட சொல்கின்றனர். இல்லை என்றால் இணைய வங்கி சேவை மூலமாக முன்பணம் கட்ட சொல்வதாகவும் புகார்கள் உள்ளது. ஆனால்,  புதிய சேவைக்கு பி.எஸ்.என்.எல் எப்போதும் இணையதளம் வாயிலாக பணம் கட்ட சொல்லாது. போலி இணையதளம் வாயிலாக பணத்தை இழந்தவர்களுக்கு பி.எஸ்.என்.எல் பொறுப்பாகாது. சேவை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள பி.எஸ்.என்.எல் மையங்களை அணுகலாம் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தை காணலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்கள் 1500 என்ற எண்ணையும், மற்ற தொலைபேசி வாடிக்கையாளர்கள் 1800-345-1500 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.   …

The post போலி இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : PSNL ,CHENNAI ,BSNL ,Dinakaran ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு