திருச்சி நகைக்கடை கொள்ளை 4 கிலோ நகைகளை மீட்பதில் திணறல் கி

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ₹13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான  கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.முருகனிடம்,  துணை கமிஷனர்கள் நிஷா, வேதரத்தினம் ஆகியோர் கடந்த 5 நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். லலிதா ஜூவல்லரியில் 28கிலோ 750கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் தரப்பட்டுள்ளது.

இதுவரை, 24 கிலோ 550 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதி 4 கிலோ 200 கிராம் நகைகள் எங்குள்ளது என்று முருகனிடம் விசாரித்தனர். ஆனால், எல்லா நகைகளையும் போலீசார் கைப்பற்றி விட்டனர் என்று முருகன் கூறி வருகிறார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம்  சுரேஷின் மனைவி கீதா மற்றும் 2 நகை வியாபாரிகளிடம், முருகன் ஏதாவது நகைகள் கொடுத்து வைத்திருக்கிறானா என்று விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் டைக்கவில்லை. நகைகளை முருகன் தான் பதுக்கி வைத்திருக்கிறான் என போலீசார் நம்புகிறார்கள். இதனிடையே முருகனின் 7 நாள் காவல் இன்றுடன் முடிகிறது.

Related Stories:

>