எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் எல்லையில், பாகிஸ்தான் சமீபகாலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.  பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர், கிர்னி செக்டாரில் நேற்று மதியம் 2 மணி அளவில், பாகிஸ்தான் ராணுவம், சிறியரக ஆயுதங்கள் மற்றும் மார்டர் ரக குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியது.  இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.Tags : Pakistani ,border , pakistan
× RELATED பாகிஸ்தான் எல்லையருகே ஆளில்லா விமானம்