×

தனியார் மர குடோனில் தீ விபத்து

திருவொற்றியூர்: மஹாராஷ்ரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் அஜய் சோனி (54). மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பார்வதிபுரம் பகுதியில் டேபிள் சேர் போன்ற மரத்தினால் ஆன வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான மரங்களை ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வந்து, இங்கு வைத்து இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இவரது குடோனில் இருந்து புகை வந்தது. இதை பார்த்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது சம்பந்தமாக செங்குன்றம் போலீசார்  விசாரித்து வருகின்றனர். மின் கசிவின் காரணமாக இந்த திடீர் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிபத்தில் கடையில் இருந்த ஏராளமான மரங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது.  


Tags : Fire , private wooden guton
× RELATED குடோனில் தீவிபத்து