×

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அர்ஜுனன் தபசு சாலையில் இருந்த சுழலும் கதவுகள் திடீர் அகற்றம்

சென்னை: மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு அமைந்துள்ள சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சுழலும் கதவும் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் செங்கல்பட்டு ஆர்டிஓ உத்தரவின் பேரில் சுழலும் கதவுகள், இரும்பு தடைகள் அகற்றப்பட்டன. மாமல்லபுரம் மேற்கு ராஜவீதியில் உள்ள வெண்ணைய் உருண்டைகல், பஞ்ச பாண்டவர் மண்டபம், கிருஷ்ணா மண்டபம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள்  அமைந்துள்ளது.  இந்நிலையில் சாலையில் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களால் புராதன சின்னங்கள் மீது வாகன புகை படிந்து சிற்ப்பங்கள் மாசடைந்து பாதிப்பு ஏற்படும் என்பதால் கடந்த சில தினத்திற்கு முன்பு மாமல்லபுரத்தில் ஆய்வு செய்த செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் இந்த சாலையில் எந்த ஒரு வாகனங்களும் செல்லாதவாறு முற்றிலும் தடை விதிக்குமாறு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், ஐந்து ரதம் பகுதியில் குடிநீர் எடுத்து வர செல்லும் இரு சக்கர வாகனங்கள் மாற்று வழியாக கிழக்கு ராஜவீதி சாலை மார்க்கமாக செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
உடனடியாக சுழலும் கதவை அகற்ற வேண்டுமென மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் கணேசன் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மனோகரன் மற்றும் பொதுமக்கள் நேற்று அர்ஜுனன் தபசு சாலையில் திரண்டு போராட்டம் நடத்தி கோஷமிட்டனர்.

இதைனையடுத்து செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயில் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று அர்ஜூனன் தபசு சாலையில் வழக்கம் போல் இரு சக்கர வாகனம் செல்லும் வகையில் வெண்ணைய் உருண்டை கல், கிருஷ்ணா மண்டபம் உள்ளிட்ட இரு இடங்களில் அமைக்கப்பட்ட சுழலும் கதவை அகற்ற வேண்டுமென மாமல்லபுரம் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் அந்த இரு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சுழலும் கதவை அகற்றி இரு சக்கர வாகனம் செல்லும் அளவில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

Tags : removal ,tapas road ,protest ,Arjun ,opposition , public opposition ,Arjuna was on tapas road ,Sudden removal, revolving doors
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...