தண்டையார்பேட்டையில் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிட பணி தீவிரம் : டிஜிபி நேரில் ஆய்வு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இதன் கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததால், இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனையடுத்து, பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நேரில் பார்வையிட்டார். அவருடன் தீயணைப்பு படை இணை இயக்குனர் பிரியா மற்றும் தீயணைப்பு படை வடசென்னை மாவட்ட அலுவலர்கள் மற்றும் கட்டிடம் கட்டும் இன்ஜினியர்கள் வந்தனர்.

அப்போது, டிஜிபி சைலேந்திரபாபு தீயணைப்பு நிலையத்தில், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அலுவலர்களின் அறை ஓய்வறை அமைக்கப்படும் பகுதிகள் குறித்து பொறியாளரிடம் ஆலோசனை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசின் சார்பில் வடசென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீனமயமான   தீயணைப்பு நிலைய அமைய உள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்,” என்றார்.

Related Stories:

>