×

மது போதையில் குளித்தபோது குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

ஆலந்தூர்: நங்கநல்லூர், நேரு காலனி, 19வது தெருவை சேர்ந்தவர் ரூபன் (29). காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மதியம் நங்கநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்கள் 2 பேருடன் மது அருந்தினார். பின்னர், 3 பேரும் அருகில் உள்ள நங்கநல்லூர் கோயில் குளத்தில் குளிக்க சென்றனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த  ரூபன் நீந்த முடியாமல் நீரில் மூழ்கினார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ரூபன் நீரில் மூழ்கி பலியானார். இதனையடுத்து நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து நழுவி சென்றுவிட்டனர்.

தகவலறிந்து பழவந்தாங்கல் போலீசார் கிண்டி, வேளச்சேரி, தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று 2 ரப்பர் படகில் நீரில் மூழ்கிய ரூபனின் சடலத்தை தேடினர். நேற்று மாலை 6 மணி வரை தேடியும் சடலம் கிடைக்கவில்லை. இதனால், தேடும் முயற்சியை கைவிட்டு நாளை வந்து பார்க்கலாம் என திரும்பிச் சென்றனர். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து  ரூபனுடன் குளிக்க சென்ற 2 பேரை பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : alcohol Youth , Youth drowns , bathing in alcohol
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது