×

தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கம் கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை நாளை ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை தாம்பரம் 4.15 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், தாம்பரத்திலிருந்து காலை 3.55, 4.15, 4.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கூட்ட நெரிசலை தவிர்க்க 2020 ஜனவரி 14ம் தேதி தாம்பரத்தில் இருந்து கோவைக்கு மாலை 6 மணிக்கும், 10ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு 7.15 மணிக்கும், டிசம்பர் 23ம் தேதி மாலை 4.45 மணிக்கும் மற்றும் ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அதிகாலை 4 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வேலூர் கண்டோன்மெண்ட்- திருவண்ணாமலை வரையில் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்டுக்கு 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் 3 நாட்கள் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Thiruvananthapuram , Special train service, Thiruvananthapuram to Thiruvananthapuram
× RELATED இரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை...