×

சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

பெரம்பூர்: சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜா (55). இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்துள்ளார். அந்த வாகனத்தை சிறுவர், சிறுமியரை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் பள்ளி வாகனமாக பயன்படுத்தி வந்தார். பல ஆண்டுகளாக பள்ளி வாகனம் இயக்கி வருவதால், அயனாவரம், ஐசிஎப், அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை இவரது வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில், இவரது வாகனத்தில் பள்ளிக்கு சென்று வந்த 5 வயது சிறுமிக்கு வேன் டிரைவர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 29ம் தேதி இந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றபோது, மருத்துவர்கள் வாயிலாக சிறுமிக்கு நேர்ந்த அவலம் தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், பள்ளி வேன் டிரைவர் ராஜா தினசரி, பள்ளி முடிந்து  சிறுமியை வீட்டில் இறக்கிவிடும் போது அடிக்கடி  பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : School van driver , School van, driver arrested , sexually abusing girl
× RELATED சென்னையில் 5 வயது சிறுமிக்கு பாலியல்...