×

விமானத்தில் பறந்த ஏழை மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம், தனியார் விமான நிறுவனம் இணைந்து இதுவரை விமானத்திலேயே பயணம் செய்யாத எழை, எளிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.
6 வயது முதல் 14 வயது வரை உள்ள  ஏழை எளிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 10 பேர் என 38 பேர் நேற்று சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனர் ரவீந்தர்நாத் சிங், மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அந்த மாணவ, மாணவிகள் விமானத்தை விட்டு இறங்கியதும் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி குரல் எழுப்பினர்.  Tags : Poor students ,boarded the plane
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை