×

பிரியங்கா காந்திக்கு பதில் பிரியங்கா சோப்ராவுக்கு ‘ஜெ’ கோஷமிட்ட காங்கிரஸ் கட்சியினர்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பொது மேடையில், பிரியங்கா காந்தி என்று கோஷமிடுவதற்கு பதிலாக, பிரியங்கா சோப்ரா வாழ்க என்று கோஷமிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் டெல்லியின் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்தர், ‘பிரியங்கா காந்தி வாழ்க’ என கோஷமிடுவதற்கு பதிலாக, ‘பிரியங்கா சோப்ரா வாழ்க’ என்று கோஷமிட்டார். அதை பின்பற்றி தொண்டர்களும் அப்படியே கோஷமிட்டனர். இதனால், பொதுகூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு பதிலாக நடிகையான பிரியங்கா சோப்ராவை வாழ்த்தியதை உணர்ந்த, முன்னாள் எம்எல்ஏ சுரேந்தர் குமார், பின்னர் தவறுதலாக கூறிவிட்டதாக கூட்டத்தில் பேசினார். ‘பிரியங்கா சோப்ரா வாழ்க’ கோஷமிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரசில் சேர்ந்தார்? என கேள்விகளுடன் சிலர் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Tags : party ,Congress ,Priyanka Chopra ,Priyanka Gandhi , Congress men chanting, Priyanka Chopra's,Priyanka Gandhi
× RELATED காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை...