எல்ஐசி தாராளம் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் கிடையாது

மும்பை: டிஜிட்டல் பண பரிவர்த்தநையை ஊக்குவிக்கும் முகமாக, பாலிதாரர்கள் இனிமேல் தங்களுடைய கிெரடிட் கார்டு மூலம் செலுத்தும் பாலிசி புதுப்பித்தலுக்கான  பிரீமியம், அட்வான்ஸ் பிரீமியம், கடனை திருப்பிச் செலுத்தும் தொகை, கடனுக்கான வட்டி ஆகியவற்றை செலுத்தினால் அதற்கான சேவை கட்டணத்தை எல்ஐசி வசூலிக்காது என்று அறிவித்துள்ளது. இந்த சலுகை திட்டம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முழுவதற்கும் கட்டணம் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்தும் பணத்தை அனைத்து டிஜிட்டல் வசதிகள் மூலம் செலுத்தலாம். பணம் செலுத்துவதற்கு அலுவலகத்திற்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. இதனால் நேரம் மிச்சமாகும். மேலும் பாலிதாரர்கள் எல்ஜசியின் சேவையை முழுமையாகப் பெற ‘MYLIC’ ஆப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனம் கடந்த 1956ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆயுள் காப்பீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு.  அதன் மூலம் தொடங்கப்பட்ட அரசு  பொதுத் துறை நிறுவனம். இதன் மூலம்  பொதுமக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.Tags : LIC , LIC generous, credit card ,free of charge
× RELATED சென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர...