பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பச்சமலையில் முதல்முறையாக நிலச்சரிவு

பெரம்பலூர்: பச்சமலையில் தொடர் ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. பச்சமலையில் நிலச்சரிவு ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் பரந்து  விரிந்துள்ளது பச்சமலை, சந்தனமரம் மற்றும் பல அரிய மூலிகைகள் நிறைந்தது இந்த மலை.  இங்கு கடந்த சில தினங்களாக அடைமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை யின் காரணமாக  பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பச்ச மலையில் தொண்டமாந்துறை அருகே அய்யர்பாளையம் கிராமத்தின் அருகேயுள்ள மலையில்  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால்மலையிலிருந்து அதிகப்ப டியான பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்தது.  தொடர்ந்து மழையும் பெய்ததால் நீர்வழிப்பாதையில் மாற்றம் ஏற்பட்டு மலையில் இருந்து வரும் வெள்ளம் விவசாய நிலத்திற்குள் பாய்ந்தது. இது  குறித்து தகவல் அறிந்த கலெக்டர் சாந்தா நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் சாந்தா  தெரிவித்ததாவது: பெரம்ப லூர் மாவட்டம் அய்யர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பச்ச மலையில்  ஏற்பட்ட நீர் இடி  என்னும் நிகழ்வால் நிலச்சரிவும், மழைநீர் செல்லும் பாதையில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள்  அச்சப்பட தேவையில்லை.
 
மக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் புவியியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து  தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மைத் துறைக்கு  அறிக்கை அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.பச்சமலையில் ஏற்பட் நிலச்சரிவால் மனிதர்களுக்கோ, கால்நடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை.அதே நேரத்தில் தற்போது யாரும் மலைக்கு செல்ல வேண்டாம்.  நீர்வழிப்பாதை மாற்றத்தால்  பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.Tags : time , Landslide for the first time in Pachhamalai
× RELATED நிலச்சரிவு பகுதியில் சீரமைப்பு: களம் இறங்கிய பொதுமக்கள்