×

ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் 'காஸ்மிக் கிரிஸ்ப்'ஆப்பிள்கள் அறிமுகம்

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய ஆப்பிளைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று பெயரிட்டுள்ளனர். ஹனிகிரிஸ்ப்’ மற்றும் ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகிய ரகங்களைக் கலந்து உருவானது என்பதால் இந்தப் பெயர் வைத்துள்ளனர். 1997ஆம் ஆண்டிலேயே வா‌ஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்த ஆப்பிள் பயிரிடப்பட்டது என்கின்றனர். இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாகும் 2-வது பழமாக ஆப்பிள் இருக்கிறது. திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 கோடி) செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Introduction , Cosmic Crisp, Apples, Introduction
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...