×

பிலிப்பைன்ஸை தாக்கிய கம்முரி புயல் காரணமாக கடற்கரை பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சம் பேர் இடப்பெயர்வு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸை தாக்கிய கம்முரி புயல் காரணமாக கடற்கரை பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் கம்முரி புயல் தாக்கியது. இதன் காரணமாக கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக மணிலா விமான நிலையத்தில் 12 மணி நேரத்துக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக 35 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பெண் ஒருவர் கூறும்போது, பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் அறிவுரையை பின்பற்றியுள்ளனர். நேற்றிரவிலிருந்தே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். ஆனால் சிலர் புயல் தங்களுக்கு பழக்கமாகிவிட்டதால் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் என்று தொடர்ந்து ஆங்கங்கே தங்கி உள்ளனர் என கூறினார். கம்முரி புயல் இவ்வாண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய 20- வது புயல் ஆகும்.

Tags : storm ,areas ,Philippines , Philippines, Kammuri Storm, coastal area, about 2 lakh people, displaced
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...