×

இலவச அரிசி வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் புதுச்சேரியில் முதல்வர் அறையை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் அறையை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு அவர்களுடைய தேர்தல் வாக்குறுதி படி ஒவ்வொரு மாதமும்  இலவச அரசி வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி இலவச அரசி வழங்கி வந்த நிலையில், கடந்த 2 வருடங்களாக இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் தொடர்ந்து கூறிவந்ததன் காரணமாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு கடந்த 23 மாதமாக அரசி வழங்கப்படவில்லை. மேலும் அரிசிக்கு பதிலாக பணமும் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் தலைமையிலான எம்எல்ஏக்கள் வையாபுரி, மணிகண்டன், பாஸ்கர், அசன்னா ஆகியோர் முதல்வர் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட வேண்டும் என எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் சபைக்காவலர்கள் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுள்ளனர். இருந்த போதிலும் அரசின் சார்பாக ஏதாவது உத்தரவு அளிக்கப்பட வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்ணா போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டக்காரர்களிடம் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : AIADMK ,room ,Puducherry ,CM ,Block CM ,Puducherry Rooms , Free Rice, Promise, Puducherry, CM Room, Siege, AIADMK MLAs, Struggle
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...