×

கரூர் அருகே மின்கசிவு காரணமாக துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கரூர்: கரூர் அருகே மின்கசிவு காரணமாக தமிழ்நாடு காகித ஆலைக்கு மின் விநியோகம் செய்யும் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகலூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்கென தனியாக அதே பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து செல்லும் மின் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சுமார் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல்-க்கு சொந்தமான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. துணை மின் நிலையத்தில் இருந்து தொடர் கரும்புகை வெளிப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த டிரான்பார்மர் அருகே மேலும் இரண்டு டிரான்பார்மர்கள் இருப்பதினால் தீயானது அருகிலுள்ள டிரான்பார்மர்களுக்கு பரவாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனும் தீயை அணைக்கும் முயற்ச்சியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். தீயனை கட்டுப்படுத்த இங்குள்ள தீயணைப்பு வாகனங்கள் போதியதாக இல்லாத காரணத்தால் சென்னை மற்றும் கோவையில் இருந்து மேலும் தீயணைப்பு வாகனங்களை வரவழைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்தது.

Tags : power station ,Karur Karur ,station ,Terrorist Fire , Karur, mining, auxiliary power station, fire
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...