×

பரங்கிப்பேட்டை அருகே உயரம் குறைவான மணமக்களுக்கு திருமணம்

புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை  அருகே உள்ள மஞ்சக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (28). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் உயரம் குறைவான வாலிபர். இவர் அதே கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், திருமணம் செய்து வைக்க பெண் தேடினர். பல இடங்களில் தேடியும் அவரது உயரத்திற்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகளான ஐடிஐ படித்து முடித்த கலைச்செல்வி என்ற பெண் கிடைத்தார். ஜெயப்பிரகாஷின் உயரத்திற்கு ஏற்ற படி கலைச்செல்வியின் உயரமும் இருந்ததால் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கலந்து பேசி இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். இதையடுத்து பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோயிலில் ஜெயப்பிரகாஷ் மற்றும் கலைச்செல்விக்கு திருமணம் நடந்தது. இதில் இரு தரப்பினரின் குடும்பத்தினர்களும்,  உறவினர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Tags : bride ,Parangipettai , Marriage
× RELATED பைக் -பஸ் மோதல்: 2 வாலிபர்கள் பலி