×

பச்சைமலையில் உள்ள கோரையாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக்கப்படுமா?

துறையூர்: துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோரையாறு நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்குவதுடன், தார்ச்சாலை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பச்சைமலை . திருச்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மணலூர் வழியாக இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பச்சமலை வண்ணாடு ஊராட்சியில் உள்ள புதூர் கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோரையாறு அருவி. இந்த அருவியில் மழை காலத்தில் குற்றால நீர்வீழ்ச்சி போல் கொட்டும் மழைநீர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியை சென்றடைகிறது. திருச்சி மாவட்டத்திலேயே உள்ள ஒரே நீர்வீழ்ச்சி கோரையாறு அருவி. அருவிக்கு செல்லும் பாதையானது துறையூர் ஒன்றிய பொது நிதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கப்பி சாலைபோடப்பட்டுள்ளது.

இந்த சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வண்டியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த அருவிக்கு பெரம்பலூரில் இருந்தும், திருச்சி பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வந்து குவிகின்றனர். ஆனால் இறங்கு பாதையும், அருவில் குளிக்குமிடம் குளம் போல் இருப்பதால் அதில் குளிப்பதற்கு பயணிகள், சுற்றுலா வரும் பெண்கள் குளிப்பதற்கு தயங்குகின்றனர். நீர்வீழ்ச்சியை சீரமைத்து தருவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இருப்பதால் அவர் முன்வந்து இந்த சுற்றுலா தளத்தை திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கோரையாறு நீர்வீழ்ச்சியை சுற்றுலா தளமாக முன் கொண்டுவர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதூரிலிருந்து கோரையாறு அருவி வரை செல்லும் சாலையை தார்சாலையாக அமைத்து வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதி செய்து கொடுத்து இந்த தளத்தை புதிய சுற்றுலாத் தலமாக்க தமிழக அரசு அறிவித்து புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koraiyaru Falls ,Green Valley ,Green Mountain , The Green Mountain
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...