×

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 3,000 கோடி கருப்பு பணம் பறிமுதல்

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். வருவாய் துறையின் மத்திய நேர்முக வரி வாரிய (சிபிடிடி) அதிகாரிகள் அறிக்கையில் கூறியதாவது: ரியஸ் எஸ்டேட் துறையில் பிரபல நிறுவனத்தில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது, கணக்கு காட்டாமல் 3,000 கோடி ஈட்டியதை என்சிஆர் ரியஸ் எஸ்டேட் குரூப் ஒப்புக் கொண்டது. பல்வேறு சொத்து பரிவர்த்தனைகளில் வரி செலுத்தாததும் ரெய்டில் கண்டறியப்பட்டது. ரெய்டு நடத்திய பின், வங்கிகளில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 32 லாக்கர்களை சீல் வைத்துள்ளோம். கணக்கில் வராத ரொக்கமாக 3.75 கோடி கைப்பற்றி உள்ளோம். வரவு வைக்காமல் 3,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியதை ஒப்புக் கொண்டுள்ள அந்த குழுமம், வரி செலுத்த தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளது. இவ்வாறு சிபிடிடி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Real estate, black money, confiscation
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது