×

சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் 2024க்குள் வெளியேற்றப்படுவார்கள்: ஜார்க்கண்ட் பிரசாரத்தில் அமித்ஷா உறுதி

சக்ரதர்பூர்: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் 2024ம் ஆண்டுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா உறுதியளித்தார்.   ஜார்க்கண்டில் நடைபெற உள்ள 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தலையொட்டி உள்துறை அமைச்சரும் பாஜ தலைவருமான அமித்ஷா சக்ரதர்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:  எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். தீவிரவாதம் மற்றும் நக்சலைட்களை வேரறுக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக உள்ளதை நான் அறிவேன். இதனால் பிரதமர் மோடி வான்வழியேயும், துல்லிய தாக்குதல் நடத்தியும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
 பாஜ தலைமையிலான மத்திய அரசு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவை அமல்படுத்த முடிவு ெசய்துள்ளோம். இதன் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஊடுருவியவர்கள் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அவர்களை வெளியேற்றக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொல்கிறார். அவ்வாறு வெளியேற்றினால் அவர்கள் எங்கு செல்வார்கள் எதை சாப்பிடுவார்கள் என்கிறார்.  ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள். உங்கள் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட அயோத்தி வழக்கில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : intruders ,campaign ,Jharkhand ,Amit Shah , Illegal Intruders, Jharkhand Promotion, Amit Shah
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...