×

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு: முஸ்லிம் அமைப்பு தாக்கல்

புதுடெல்லி:  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி விவகாரத்தில் கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில் `சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக பாபர் மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து ஜமியத் உலாமா இ இந்த் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து ஜமியத் உலாமா இ இந்த் அமைப்பின் தலைவரும் அயோத்தி நில வழக்கின் மூல மனுதாரரான எம்.சித்திக்கின் வாரிசுமான மவுலானா சயீத் ஆசாத் ரஷிடி உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், `அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் நம்பிக்கை மற்றும் வழக்கு தொடுத்தவர்கள் இடையே சமத்துவத்தை கடைபிடிக்க முயன்றுள்ளது. வழக்கில் இந்து தரப்புக்கு ராமர் கோயில் அமைந்துள்ள 2.77 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய நீதிமன்றம், முஸ்லிம் தரப்புக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தை தொழுகைக்காக ஒதுக்கீடு செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை எதுவும் விடுக்க வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனு தொடர்பாக ரஷிடி கூறுகையில், `அயோத்தி வழக்கு தீர்ப்பை முற்றிலும் எதிர்த்து இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார்.

Tags : Supreme Court ,Ayodhya ,Muslim Organization Supreme Court ,Organization , Ayodhya case, Supreme Court, restraining order, Muslim organization
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...