×

டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரை காப்பாற்ற விவசாயிகள் மும்முரம்: 10 கிராமங்கள் துண்டிப்பு

புதுக்கோட்டை: டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூரில் வெள்ளம் சூழ்ந்த நிைலயில் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி அருகே 26 கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 10 ஏரிகளின் உபரிநீரும் வெளியேற்றப்பட்டதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது. அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பிள்ளையார்திடல் மற்றும் கட்டுமாவடி பேரிடர் மையங்களில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர். சுகாதார துறை சார்பில் அவர்களுக்கு பரிசோதனை மற்றும் நோய் தொற்று தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவையான உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

பெரம்பலூர்: சேலம், திருச்சி,  பெரம்பலூர்  மாவட்டத்தில் பரவியுள்ள பச்சமலையில் கடந்த சில தினங்களாக  கனமழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு இந்த பகுதிகளில் மழை கொட்டி  தீர்த்தது. இதன் காரணமாக மலையிலிருந்து வந்த வெள்ளத்தால் கல்லாற்றில்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. வேப்பந்தட்டை தாலுகாவில்  அரும்பாவூர் பெரிய ஏரி,  குன்னம் தாலுகாவில் வயலூர் ஏரி  நிரம்பி வழிகிறது. அரும்பாவூர் பெரியசாமி  கோவில் கலிங்கு  வழியாக தொண்டமாந்துறை தடுப்பணையைக் கடந்து  வெண்பாவூர் ஏரிக்கு  தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனால் வெள்ளம் தாழை நகரில்  புகுந்தது. 10 கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.   உப்பளம் மூழ்கியது: புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  4 நாட்களாக பெய்த கனமழையால் உப்பளங்களில் வெள்ளநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கெனவே உற்பத்தி செய்த உப்பு மலைபோல் குவிக்கப்பட்டு மழையில் நனையாமல் இருக்க தார்பாய்கள், பனைஓலைகள் மூலம் மூடப்பட்டுள்ளது. பவானி சாகர் அணை நிரம்பியது: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நிரம்பி உள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க இயலாத நிலை காரணமாக அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடிநீரும் அணையில் இருந்து மேல்மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதியில் ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. மேலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 30 ஆயிரம் கன அடியாகவும், நீர் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது.  

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் பாதுகாப்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுகிறது. ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 20 கிராமங்களில் உள்ள வயல்களில் உளுந்து, சோளம், கம்பு, நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.  கடலாடி பகுதியில் தொடர் மழையால் 20 கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கின. மரம் விழுந்து பலி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்ேகாணம் அடுத்த சித்தேரியை ேசர்ந்த சரண்(21), காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று காலை பைக்கில் சென்றபோது, சித்தேரி அருகே மழை காரணமாக மரம் முறிந்து விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் சென்ைன அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வீராணம் ஏரி நிரம்பியது 10,000 கனஅடி வெளியேற்றம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி. கடந்த 5 நாட்களாக பெய்து வந்த அடைமழையின் காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் வெள்ளியங்கால் ஓடை வாய்க்காலில் திடீரென விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தொடங்கி 10 ஆயிரம் கனஅடி வரைவெளியேற்றினர். இதனால் வெள்ளியங்கால் வடிகால் ஓடையின் கரையோரப் பகுதிகளான கள்ளந்தோப்பு, வடக்கு கொளக்குடி, திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், வீரநத்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

 வீடுகளையும் உடைமைகளையும் இழந்த கிராம மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி மறுவேளை உணவு சமைக்கவே முடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டனர். நேற்று நீர்திறப்பு 8500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் வீரநத்தம் கிராமத்தில் புகுந்த தண்ணீர் குறைந்தபாடில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவலநிலையில் உள்ளனர்.

Tags : villages ,Samba ,Delta , Delta, flood, samba crop, farmers
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை