சொந்த செலவில் சூனியம் வீடியோ காலில் பேசிய பெண்ணிடம் நிர்வாணமாக போஸ் கொடுத்த வாலிபர்: மிரட்டி 41 ஆயிரத்தை பறித்த பெண்

பெங்களூரு: வீடியோ காலில் பேசிய பெண்ணிடம் நிர்வாணமாக போஸ் கொடுத்த வாலிபர் அந்த பெண்ணிடம் ரூ.41 ஆயிரம் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மடிவாளா வெங்கடபுராவை சேர்ந்தவர் ராம்குமார் (39, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆன்லைன் வலைதளம் வாயிலாக மனிஷா அகர்வால் என்ற பெண் இவருக்கு அறிமுகமானார். இருவரும் தங்கள் புகைப்படத்தை பகிர்ந்துக் கொண்டு பேசினர். இருவருக்கும் பிடித்துவிட்டது. இதையடுத்து மனிஷா, ராம்குமாரின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு தினமும் பேச தொடங்கினார். நாட்கள் செல்லச் செல்ல ஒருபடி மேல் சென்று வீடியோ காலில் பேச தொடங்கினர். அப்போது மனிஷா, ராம்குமாரிடம், உனது நிர்வாண உடலை காண்பிக்கும்படி கூறினார்.

அதன்படி ராம்குமாரும் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக நின்றபடி போஸ் கொடுத்தார். அதை மனிஷா பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை ராம்குமாருக்கு அனுப்பிய மனிஷா, எனக்கு தேவைப்படும் நேரம்மெல்லாம் பணம் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்த நிர்வாண வீடியோவை முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், வாட்ஸ் ஆப் வலைத்தளங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதில் பதற்றம் அடைந்த ராம்குமார், அவர் கேட்டபோதெல்லாம் ரூ.5 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.9 ஆயிரம் என்று அனுப்பி வைத்தார்.  இதற்காக 2 செல்போன் மற்றும் 2 வங்கி கணக்குகளை மனிஷா பயன்படுத்தியுள்ளார். இதுவரை மொத்தம் ரூ.41 ஆயிரம் வரை அந்த பெண் கறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதனால் செய்வது அறியாது தவித்த ராம்குமார், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் செல்போன் எண்ணை வைத்து, இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அது வெவ்வேறு மாநிலத்தை காண்பித்துள்ளது. மேலும் போலியான முகவரியை கொடுத்து வங்கி கணக்கு தொடங்கியதும் தெரியவந்தது. மோசடி செய்யவேண்டுமென்ற நோக்கிலேயே இளம்பெண் செயல்பட்டிருப்பதால், சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ராம்குமார் ஒரு உதாரணம்.

Related Stories:

>