ராகுல் மீதான புகார் உரிமை மீறல் குழுவுக்கு செல்கிறது

புதுடெல்லி: மக்களவையில் பா.ஜ எம்.பி பிரக்யா தாகூர், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசினார். இதற்காக நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வைக்கப்பபட்டார். இந்நிலையில் பிரக்யாவை தீவிரவாதி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனால் அவருக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னையை பிரக்யா எழுப்பினார். இந்த புகாரை நாடாளுமன்றத்தின் உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘‘எந்த தண்டனையும் பெறாத எம்.பியை தீவிரவாதி என கூறியது மோசமான விஷயம்’’ என சில எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.


Tags : Rahul ,rights violation team , Rahul, Rights Violation Committee
× RELATED அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர்...